Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 நவம்பர் 22 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
மூத்த ஊடகவியலாளரும் , உதயன் பத்திரிக்கை ஆசிரியருமான ம.வ. கானமயில்நாதன் இன்றைய தினம் திங்கட்கிழமை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 79ஆகும்.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ம.வ. கானமயில்நாதன் 1942ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி பிறந்தார்.
உதயன் பத்திரிகை 1985ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட முதல் தனது வாழ்வின் இறுதிக்காலம் வரையிலான 36 வருடங்கள் பிரதம ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.
நெருக்கடியான கால கட்டத்தில் தாயகத்தில் இருந்து ஊடகப்பணியாற்றிய மிக சொற்ப அளவிலான மூத்த ஊடகவியலாளர்களுக்குள் கானமயில்நாதனும் ஒருவர்.
பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதியன்று எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் தன்னார்வ அமைப்பின் விருது வழங்கும் விழாவில் , விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அதேவேளை ஊடகத்துறையில் தேசியம் சார்ந்து நெருக்கடியாக சூழலில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியமைக்காக கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி யாழ்.ஊடக அமையத்தினால் கௌரவிக்கப்பட்டார்.
அன்னாரது இறுதி கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
8 hours ago
30 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
30 Aug 2025