சொர்ணகுமார் சொரூபன் / 2018 மே 11 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
“கூட்டம் தொடர்பில் நாம் கோரிய தகவல்கள் உரிய நேரத்துக்குள் கிடைக்கப்பெறாமையினாலேயே அனுமதி வழங்கவில்லை” என யாழ்.பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபன் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கூட்டத்தை வளாகத்தில் நடத்துவதற்கு அனுமதிக்காமை குறித்து, பல்கலைக்கழக பதிவாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கூட்டம் நடத்துவதற்கான அனுமதிக் கோரிக்கை கடிதம் எனக்கு நேற்று (10) மாலை 5.30 மணியளவிலேயே கிடைக்கப்பெற்றது. நிர்வாக ஒழுங்குமுறைக்கு அமைவாக வளாகத்தில் ஒரு கூட்டம் நடத்துவதுக்கான அனுமதிக்கான கோரிக்கை ஒரு கிழமைக்கு முன்னதாக விடுக்கப்பட வேண்டும்.
கோரிக்கை விடுக்கப்பட்ட கூட்டமானது எதற்கானது?, பங்குதாரர்கள் யார்? போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். பின்பு இத்தகவல்களைக்கொண்டு உரிய தரப்புடன் கலந்துரையாடி துணைவேந்தரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்பே அனுமதி அளிக்கப்படும்.
இத்தகவல்களை நாம் கோரிக்கை விடுத்தவர்களிடம் கோரியிருந்தோம். அவர்கள் அத்தகவல்களை உரிய நேரத்துக்குள் எம்மிடம் சமர்ப்பிக்கவில்லை. எனவே கூட்டத்துக்கான அனுமதியை வழங்க முடியவில்லை” என தெரிவித்தார்.
35 minute ago
47 minute ago
57 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
47 minute ago
57 minute ago
5 hours ago