Editorial / 2019 மே 14 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவது இது முதற்றடவை அல்லவெனத் தெரிவித்த மக்கள் புரட்சிகர விடுதலை முண்ணணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தந்தை செல்வாவினுடைய காலம் முதல் இன்று வரை தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு கொண்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
கட்டப்பிராயில் உள்ள அவரது இல்லத்தில், நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், புதிய அரசியல் சாசனம் கொண்டு வரப்படும் என ஒவ்வொரு வருடமும் உறுதி மொழி கொடுக்கப்பட்டு, மறுபுறத்தில், அரசாங்கத்தை காப்பாற்றும் விவத்தில் செயற்பட்டு, இறுதியில் எங்களை அரசாங்கம் ஏமாற்றி விட்டதாகக் கூநுவது வெட்கக்கேடான செயலெனவும் தெரிவித்தார்.
பின்னர், அதிகாரப் பகிர்வு குழு நியமிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், அந்தக் குழுவும் செயற்படவில்லையெனவும் குற்றஞ்சாட்டினார்.
இவை அனைத்தும் சிறிதரனுக்கோ, சுமந்திரனுக்கோ தெரியாத விடயங்கள் அல்லவெனவும் இவர்கள் அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற தோற்றப்பாடே காணப்படுவதாகவும், அவர் குற்றஞ்சாட்டினார்.
9 minute ago
49 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
49 minute ago
55 minute ago
1 hours ago