2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா மீட்பு; இருவர் கைது

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 01 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

யாழ்ப்பாணத்தில் வியாபார நோக்கத்துடன் சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற இருவர், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரால், யாழ்ப்பாணம் - செம்மணி வீதியில் நேற்று (30) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரவெட்டியைச் சேர்ந்த 29, 30 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர் எனவும்  கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கிலோ 300 கிராம் கஞ்சா போதைப்பொருள், மோட்டார் சைக்கிள், அலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில், பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான குழுவினரே, இந்தக் கஞ்சா கடத்தலை முறியடித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X