Janu / 2024 ஜனவரி 29 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற ஜோசப் மக்சிமஸ் சுரேஷ்குமார் (வயது 32) காணாமல் போயுள்ளார்.
குறித்த இளைஞன் மேலும் இருவருடன் , குருநகரில் இருந்து படகில் கடற்தொழிலுக்கு சென்று படகில் தங்கி தொழிலில் ஈடுபட்ட நிலையில் , இரவு மூவரும் படகினுள் நித்திரைக்கு சென்றுள்ளனர்.
காலையில் எழுந்து பார்த்த போது இளைஞனை காணவில்லை எனவும், இளைஞனை காணாத நிலையில் கரை திரும்பி ஏனைய கடற்தொழிலாளர்களும் அறிவித்து, மேலதிக படகுகளுடன் கடலுக்கு சென்று தேடுதல் நடத்தியும் இளைஞனை காணவில்லை எனவும் அவ்விரு இளைஞர்களும் தெரிவித்துள்ளனர்.
இளைஞன் காணாமல் போன விடயம் தொடர்பில் கடற்தொழில் நீரியல் வளத்துறை , பொலிஸார் மற்றும் கடற்படையினர் உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம்.றொசாந்த்
13 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago