Niroshini / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைவிழுந்தான் பகுதியில், இன்று (10), கப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது.
மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தவரின் அவரது தலைக்கவசம் கீழே விழுந்ததையடுத்து, சமிக்ஞைகள் ஏதும் இல்லாமல் வீதியின் குறுக்கே நிறுத்தியுள்ளார்.
இதன்போது, கிளிநொச்சி நோக்கி வந்த குறித்த கப் ரக வாகனம், எதிரே நின்ற மோட்டார் சைக்கிள் அவதானித்து நிறுத்த முற்பட்ட வேளை, அருகில் இருந்த நீர்பம்பியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கப் ரக வாகனத்தில் பயணித்த மூவர் சிறுகாயங்களுக்குள்ளானர்.
மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
15 minute ago
20 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
54 minute ago
1 hours ago