எம். றொசாந்த் / 2019 ஜூன் 10 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்.காரைநகர் கடற்பகுதியில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் காணாமல் போய் ஒருவார காலம் கடந்தும் எந்தவிதமான தகவலும் கிடைக்காமையால் உறவினர்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
காரைநகர் மத்தியை சேர்ந்த கோடீஸ்வரன் குகபிரியன் (வயது 23), தவராசா சத்தியராஜ் (வயது 26) ஆகிய இருவரும் கடந்த 2ஆம் திகதி காரைநகரில் இருந்து தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளனர்.
அது தொடர்பில் கடந்த 4ஆம் திகதி உறவினர்களால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டை அடுத்து அது தொடர்பில் பொலிஸார் கடற்படையினருக்கு அறிவித்தனர்.
அதனை தொடர்ந்து கடற்படையினர் மற்றும் சக மீனவர்கள் கடலில் தேடுதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஒரு வார காலமாகியும் குறித்த மீனவர்கள் தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் கிடைக்கப் பெறாமையால் உறவினர்கள் மத்தியில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது.
6 minute ago
12 minute ago
52 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
52 minute ago
58 minute ago