2025 மே 16, வெள்ளிக்கிழமை

காற்றாலை மின்உற்பத்தி நிலையத்துக்கு எதிராக மறவண்புலவு மக்கள் போராட்டத்தில் குதித்தனர்

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், என்.ராஜ்

 

யாழ்ப்பாணம் - தென்மராட்சி, மறவண்புலவு பகுதியிலுள்ள பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்களால், இன்று (18) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

முன்னதாக, கொடிகாமம் பஸ் நிலையத்தில் இருந்து ஏ9 வீதியூடாக சாவகச்சேரி பிரதேச சபையை நோக்கிப் பேரணியாகச் சென்ற மக்கள், பிரதேச சபைக்கு முன்னால், கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்தித்த சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர், இந்தத் திட்டம் தொடர்பில், பிரதேச சபைக்கு தெரியப்படுத்தவில்லை என்றும் சபையின் அனுமதியில்லாமலேயே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

எனவே, இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும், அவர் கூறினார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .