2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கிளிநொச்சியில் தாயும் மகனும் படுகொலை

Editorial   / 2019 ஜூலை 30 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன் 

கிளிநொச்சி ஜயந்தி நகர் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தாய் மற்றும் மகன் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

74 வயதுடைய தாய் மற்றும் 34 வயதுடைய மகன் ஆகியோரோ கொலை செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் நீதவான் விசாரணைகளின் பின்னர், கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. 

சம்வபம்  தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X