Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்ரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, கிருஷ்ணபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் கொரோனா வைரஸ் சிகிச்சை நிலையம் தொடர்பில், பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளதுடன், அது தொடர்பில் கிளிநொச்சி தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் இன்று (20) மகஜரும் கையளித்தனர்.
கிருஷ்ணபுரம் பகுதியில் நேற்றுக்காலை ஒன்றுகூடிய பிரதேச மக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், தமது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காக கிளிநொச்சி தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி, அதிகாரிகள், ஊடகவியலாளர்களையும் அழைத்திருந்தனர்.
இதன்போது அப்பகுதியில் அமைக்கப்பட்டுவரும் குறித்த சிகிச்சை நிலையத்தால் தாம் அச்சமடைந்துள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பில் மீள்பரிசீலணை செய்யுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு வரும் காணி 14 பேருக்குச் சொந்தமான காணி எனவும், இது இராணுவத்தால் விடுவிக்கப்பட்டு, அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு வருவதாகவும் மக்கள், பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
இந்த விடயங்களைக் கேட்டறிந்த பொலிஸ் அதிகாரி, இது தொடர்பில் அரசாங்க அதிபரிடம் கலந்துரையாடுவதாகவும் மேற்படி வைத்தியசாலையானது இப்பகுதி மக்களுக்காகவே உருவாக்கப்படுவதாகவும் வெளி இடங்களில் இருந்து அழைத்துவந்து இங்கு யாருக்கும் சிகிச்சை வழங்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago