Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 நவம்பர் 08 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
கோட்டாபய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என, மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் விமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில், இன்று (08), 'ஊரிலிருந்து தொடங்குவோம்' என்னும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தற்போதுள்ள அரசாங்கமானது மக்களை ஏமாற்றும் தனது நாடகத்தை அரங்கேற்றி வருவதாகவம் குறிப்பாக இராணுவத்தைப் பயன்படுத்தி, சேதன விவசாயத்தை வலுக்கட்டாயமாக தான் முன்னெடுப்பேன் என ஜனாதிபதி தெரிவிக்கும் அளவுக்கு, இந்த நாட்டில் அராஜகம் காணப்படுகின்றது எனவும் கூறினார்.
பச்சை, நீலம், சிவப்பு என பார்த்தால் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், மக்கள் இன்னல்களை முகம் கொடுக்கின்றார்கள் எனவும், அவர் தெரிவித்தார்.
நாட்டில் ஒரு கோடி மக்கள் விவசாயிகளாக உள்ள நிலையில், நெற்கதிர் என்றால் என்ன என்று தெரியாத ஜனாதிபதி தான், தற்போது விவசாய புரட்சி ஏற்படுத்துவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றார் எனவும், அவர் சாடினார்.
'விவசாயப் பெருமக்களுடன் கலந்துரையாடி தான் சில முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால் விவசாயியல்லாத விவசாயத் துறையை பற்றி தெரியாத ஒருவர் நாட்டில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்குரிய தீர்மானங்களை எடுப்பது ஒரு வியப்பான விடயமாகும்
'எனவே, எதிர்வரும் காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சியை மாற்றி, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.
40 minute ago
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
53 minute ago
2 hours ago