2025 மே 03, சனிக்கிழமை

சங்கானை சந்தையில் 8 வியாபாரிகளுக்கு தொற்று

Niroshini   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

-எம்.றொசாந்த்

 

சங்கானை பொதுச் சந்தையில், 100 வியாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், 8 வியாபாரிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளங்காணப்பட்டவர்கள், சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட சங்கானை – ரிஷி ஒழுங்கையைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரும், சங்கானை - தேவாலய வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரும், நிச்சாமம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரும் ஆவார்.

அத்துடன், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்பைச் சேர்ந்த 74 வயதுடைய ஒருவரும், வடலியடைப்பைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரும், சண்டிலிப்பாய் - ஐயானார் கோவிலடியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரும், சுதுமலை தெற்கைச் சேர்ந்த 56 வயதுடையவரும் தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

மேலும், உடுவிலைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரும் சங்கானை பொதுச் சந்தை வியாபாரியாக உள்ள நிலையில், அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X