Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தவிசாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஆராய கட்சியின் மாவட்ட, தலைமைக் குழு கூட்டங்கள் அவசரமாக நடத்தப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.
நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வ முடிவுகள் எதனையும் எடுக்காத நிலையில், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ அமைப்பின் தவிசாளர் சிவாஜிலிங்கம், சுயேட்சையாக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.
இதற்கு கட்சியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மேலும் சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிடுவதற்கும் கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் அவருக்கு எதிராக கட்சி நிச்சயம் நடவடிக்கை எடுக்குமென்றும் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அறிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே, சிவாஜிலிங்கம் தேர்தலில் களமிறங்கியிருப்பது தொடர்பில் கட்சியில் அவசர கூட்டங்கள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
குறிப்பாக சிவாஜிலிங்கம் போட்டியிடுவது உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் ஆராயும் முகமாக கட்சியின் யாழ் மாவட்டக் குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை யாழில் நடைபெறவிருக்கின்றது.
மேலும் மாவட்டக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து கட்சியின் உயர் பீடமான தலைமைக்குழுக் கூட்டமும் நாளை, வவுனியாவில் நடைபெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதற்கமைய் இன்றையதினம் யாழில் நடைபெறவிருக்கும் கட்சியின் யாழ் மாவட்ட குழுக் கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெறவிருக்கும் கட்சியின் தலைமைத்துவக் குழுக் கூட்டத்திலும்; சிவாஜிலிங்கம் தொடர்பில் சில முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாகவும் தெரியவருகின்றது.
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago