Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
“எங்கள் ஜனாதிபதி புரட்சியாளனாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் சிறந்ததொரு நிர்வாகி” என, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
யாழில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில், இன்று, தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“சஜித் பிரேமதாஸ என்பவருக்கு இருந்த மாபெரும் அலையையும் மீறி யாழில் விழுந்த 23,000 வாக்குகள் 250,000 இலட்சம் வாக்குகளுக்கு சமன்.
“நாட்டில் எந்த ஜனாதிபதியும் செய்யாத மாற்றங்கள் இப்போது நடைபெறுகின்றன. இதனால், மக்கள் மத்தியிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
“புரட்சியாளனை விட சிறந்த நிர்வாகியே நாட்டை கட்டியெழுப்ப முடியும். A9 வீதியில் விபத்து நடந்து 20 பேர் இறந்தால் புரட்சியாளன் அது பார்த்து புரட்சி செய்வான். ஆனால் சிறந்த நிர்வாகி அந்த இருபதாக, பத்தாக எப்படி குறைக்கலாம். பிறகு எப்படி ஐந்தாக குறைக்கலாம் என சிந்தித்து நடவடிக்கை எடுப்பான்.
“எனவே, எங்கள் ஜனாதிபதி புரட்சியாளன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் சிறந்த நிர்வாகி. எங்களுக்கு அமைச்சு பதவி தரவில்லை என குறை கூறுகிறார்கள்.
“ஆனால், மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவி கிடைத்துள்ளது. இதன் ஊடாக யாழ்.மாவட்டத்தை கட்டியொழுப்புவேன்.
“தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சென்றே இவ்வளவும் செய்கிறேன். எதிர்காலத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாக நாடாளுமன்றுக்கு என்னை அனுப்பி வைப்பீர்கள் என நம்புகிறேன்” எனவும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago