Niroshini / 2021 நவம்பர் 23 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
மாவீரர் தினத்துக்கு தடை உத்தரவு வழங்குமாறு கோரி, ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு பொலிஸார் இணைந்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு, இன்றைய தினம் (23), தள்ளுபடி செய்யப்பட்டது.
அறுவருக்கு எதிராக மாவீரர் நினைவேந்துலுக்கு தடை விதிக்க கோரி, மேற்குறிப்பிட்ட இரண்டு பொலிஸ் நிலையங்களால், மல்லாகம் நீதிமன்றுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வழக்கை, இன்று விசாரித்த ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான், குறித்த நிகழ்வு நடைபெறும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிடாடிருந்தார்.
அத்துடன், குறித்த அறுவரும், இலங்கையின் சட்டத்திட்டங்களை மீறுவார்களேயானால், அவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், நீதவான் தெரிவித்தார்.
குறித்த வழக்கில், சிரேஷ்ட சட்டத்தரணி சிறீகாந்தா, சிரேஷ்ட சட்டத்தரணி சுகாஷ், சட்டத்தரணி ராகினி நடராசா சட்டத்தரணி வெலீனா, சட்டத்தரணி நிரோசன் மற்றும் சட்டத்தரணி சுதர்சினி ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
19 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
1 hours ago