2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தடையுத்தரவை மாற்றி வாங்கிய பொலிஸார்

George   / 2017 மார்ச் 05 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி, சனிக்கிழமை விஜயம் செய்த போது, போராட்டங்களுக்கான தடையுத்தரவை பொலிஸார் மாற்றி வாங்கிய  சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் குறைகேள் அலுவலகம் ஒன்றை, ஜனாதிபதி,  திறந்து வைத்தார்.
இதன்போது, வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். மாவட்டச் செயலகத்தின் முன்னால், ஏ-9 பிரதான வீதியை மறித்து, வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளால் போராட்டம் இடம்பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டு, பொலிஸாரால் நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

ஆனால் அங்கு, வேலையற்ற பட்டதாரிகள் வீதியோரமாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பொலிஸார் பெற்று வந்த தடையுத்தரவு பயனற்று போனது.

இதேபோன்று, பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி, சுதந்திரதின தேசிய கொடி ஏற்றும் போது, மாவட்டச் செயலகத்தின் முன், ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, காணாமலாக்கப்பட்ட உறவுகளால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது,  “மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்” என, தெரிவித்து, பொலிஸார் தடையுத்தரவு  பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X