Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஒக்டோபர் 12 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ். நிதர்ஷன்
தமிழ் மக்களுக்காக கனடா அரசாங்கம் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என, யாழ். மாநகர சபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரிக்கை விடுத்தார்.
யாழ்ப்பாணத்துக்கு, இன்று (12) வருகை தந்த இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே, மேயர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
இந்தச் சந்திப்பு, யாழ். மாநகர சபையில் அமைந்துள்ள மேயர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மேயர், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை கனடா தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதுமட்டுமல்லாமல், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பு தொடர்பான விசாரணைகளுக்கும் கனடா அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்ந்து கிடைக்க வேண்டும் எனவும், அவர் கோரினார்.
அத்துடன், 'கனடா நாட்டின் ரெறண்டோ மாநகர சபைக்கும் யாழ் மாநகர சபைக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட நிலையில், அதன் செயற்பாடுகள் பாரியளவில் நடைபெறவில்லை.
'ஆகவே, கனடா அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் செயற்படும் நிலையில், தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்காக கனடா அரசாங்கம் தமது பங்களிப்புக்களை மேற்கொள்ள வேண்டும்' எனவும், மேயர்; கோரிக்கை விடுத்தார்.
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago