2025 மே 08, வியாழக்கிழமை

’தமிழ் பிரதிநிதிகளிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது’

Niroshini   / 2020 நவம்பர் 08 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடத்தில் மாற்றங்கள் ஏற்படுவது வரவேற்கத்தக்கதெனத் தெரிவித்த கடற்றொழில் அமைச்சரும் ஈ.பீ.டிபியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா, கடந்த கால தவறுகளை அவர்கள் உணர்ந்து செயற்படுவதை வரவேற்பதாகவும் கூறினார்.

யாழில், இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இந்த அரசாங்கத்தின் அமைச்சர் கலந்துகொள்ளும் அபிவிருத்தி கூட்டங்களில், தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் என்பன தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம், யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றதெனவும், இதற்கு மாவட்டத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார்.

இதற்கமைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்புனர்கள் வருகை தந்திருந்தனரெனத் தெரிவித்த அவர், அவ்வாறு இந்தக் கூட்டங்களுக்கு அவர்கள் வருகை தந்த விடய்ம் வரவேற்கதக்கதெனவும் கூறினார்.

'கடந்த காலங்களில் தாம் இழைத்த தவறுகளை உணந்து கொண்டு தற்போது இத்தகைய கூட்டங்களில் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கது. ஆகவே இவர்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை உணர்ந்து இத்தைய முடிவுகளை எடுத்திருப்பதாகவே நினைக்கிறேன்' என்று, டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X