Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2021 செப்டெம்பர் 02 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த் என்.ராஜ்
தமிழர் விடுதலை கூட்டணியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான வி.தர்மலிங்கத்தின் 36ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில், இன்று (02) அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் மகனும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தனின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் - தாவடியில் உள்ள நினைவிடத்தில், குறித்த அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
இதில், தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, சுன்னாகம் பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago