Niroshini / 2021 செப்டெம்பர் 02 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்
பயணத் தடை நடைமுறைகளை மீறி, வீதியில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டோர், கோப்பாய் பொலிஸாரின் வருகையை கண்டு, விற்பனை செய்த மரக்கறிகளையும் கைவிட்டு தப்பியோடிய சம்பவம் ஒன்று, திருநெல்வேலி - சிவன் அம்மன் வீதியில், இன்று(02) காலை இடம்பெற்றது.
அவ்விடத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதனால் அங்கு சனக்கூட்டம் அதிகமாக காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்ட நிலையில், கோப்பாய் பொலிஸாரால் ஏற்கெனவே அவ்விடத்தில் மரக்கறி வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், அவ்விடத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டோரை விரட்டிய போதிலும், தொடர்ச்சியாக அவ்விடத்தில் வியாபாரம் மேற்கொள்ளப்பட்டதுடன், பொதுமக்களும் அதிகளவில் ஒன்றுகூடுவர்.
இதையடுத்து, இன்று காலை, கோப்பாய் பொலிஸார், அவ்விடத்துக்கு வருகைதந்தபோது, வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டோர், தமது வியாபார பொள்;களையும் கைவிட்டு தப்பியோடியுள்ளனர்.
எனினும், பொலிஸார் திரும்பி சென்ற பின்னர், தமது மரக்கறி பொருள்களை வியாபாரிகள் எடுத்துச் சென்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago