2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

’தேசிய பட்டியல் ஆசனம் புளொட்டுக்கு உரியது’

Kogilavani   / 2017 ஜூன் 09 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான சுழற்சி முறை தேசிய பட்டியல் ஆசனம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)க்கு உரியது என்று, அக்கட்சியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'வடக்கு மாகாண சபைக்கு தேசிய பட்டியல் ஆசனங்கள் இரண்டு கிடைத்தன. அதில் ஒன்று முஸ்லிம் சிறுபான்மை இனத்தவர் என்ற ரீதியில் நிரந்தரமாக அஸ்மினுக்கு வழங்கப்பட்டது. அவர் நியமிக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்று வரையிலும் ஒரு தமிழரசுக்கட்சி அங்கத்தவராகவே இருந்து வருகின்றார். மற்றைய ஆசனம் சுழற்சிமுறையில் வழங்கப்பட்டு வந்தது. இவ் விடயம் அனைத்து கட்சி உறுப்பினர்களாலும் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில,; முதன்முறையாக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசு கட்சி உறுப்பினர் மேரி கமலா குணசீலன் நியமிக்கப்பட்டு உறுப்பினராக 2 வருடங்கள் பதவி வகித்தார். அவருக்கு அடுத்ததாக ஒரு வருடகாலம் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியைச் சேர்ந்த நடராஜா பதவி வகித்தார். தற்போது டெலோ கட்சியைச் சேர்ந்த எஸ்.மயூரன் பதவி வகித்து வருகிறார். அவருடைய ஒருவருட சேவைக்காலம் எதிர்வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது.

இந்த நிலையில், அடுத்த உறுப்பினருக்கு உரிய பதவி எமது கட்சியைச் (புளொட்) சேர்ந்த உறுப்பினருக்கே வழங்கப்பட வேண்டும். இவ்விடயம்; தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடனும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தோம். அண்மையில் தொடர்ச்சியாக இவ்விடயம் தொடர்பில் கட்சி தலைமையிடம் கோரி வருகிறோம். அந்த வகையில் எந்த மாற்றங்களும் இடம்பெறாமல் எமது கட்சி உறுப்பினருக்கே குறித்த ஆசனம் வழங்கப்பட வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .