2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நிதி உரிமையாளர் விவகாரம்: படகு உரிமையாளர் தனிமையில்

Niroshini   / 2020 நவம்பர் 08 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வாடிக்கையாளர்கள் வைப்பிலிட்ட பணத்தை சுருட்டிக்கொண்டு இந்தியாவுக்குத் தப்பிச்சென்ற தனியார் நிதி நிறுவன உரிமையாளரின் குடும்பத்தை படகில் ஏற்றிச் சென்ற வல்வெட்டித்துறை -  தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்த ஒருவர்; பொலிஸ் காவலில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இந்தியாவுக்குச் சென்று வந்திருக்கலாம் என்ற அடிப்படையிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தமிழகம் - வேதாரண்யம் கோடிக்கரையில் யாழ்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகு ஒன்றில் பயணித்த திருகோணமலையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றை தமிழக கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

முகமது அன்சாரி (வயது 45), அவரது மனைவி சல்மா வேகம் (வயசு 35), இவர்களது 10 வயது மகன் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களாவர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இலங்கையில் தனியார் நிதி நிறுவனமொன்றை நடத்தியதாகவும் தொழிலில் ஏற்பட்ட நட்டம் காரணமாகவே இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், நிதி நிறுவன உரிமையாளரை யாழ்ப்பாணத்திலிருந்து படகில் அழைத்துச் சென்று இறக்கினார் என்ற குற்றச்சாட்டில் தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்த ஒருவர், அவரது வீட்டில் பொலிஸ் காவலில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இந்தியாவுக்குச் சென்று வந்திருக்கலாம் என்ற அடிப்படையில், பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், தமிழகப் பொலிஸாரிடம் நிதி நிறுவன உரிமையாளர் வழங்கிய வாக்குமூலம் கிடைத்ததும், குறித்த படகு உரிமையாளர் கைது செய்யப்படுவார் என்று வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .