Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 10 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டத்தை இலங்கையில் அபிவிருத்தி செய்வதற்கு, பங்களாதேஷ் அரசாங்கத்தின் அனுபவத்தையும் உதவிகளையும் வரவேற்பதாகவும் குறுகிய காலத்தில் நன்னீர் மீன் வளர்ப்பில் அபவிருத்தியடைந்த பங்களாதேஷின் செயற்பாடுகளை நேரில் கண்டறிவதற்காக, விரைவில் பங்களாதேஷுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சுக்கு, இன்று (10) வருகைதந்த பங்களாதேஷின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் றியாஷ் ஹாமிதுல்லாவுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போதே, அமைச்சரால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற நீர்நிலைகளில் நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதன் ஊடாக, மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றிக்கொள்ள முடியும் எனவும் வீட்டுத் தோட்டங்களைப் போன்று, நன்னீர் மீன் வளர்ப்பையும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவன் மூலம், பெண்களையும் கணிசமானளவு நன்னீர் மீன் வளர்ப்பில் ஈடுபடுத்த முடியும் எனவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால், குறித்த சந்திப்பின்போது நம்பிக்கை வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர், நன்னீர் மீன் வளர்ப்பில் உலளாவிய ரீதியில் ஐந்தாவது இடத்தில் பங்களாதேஷ் இருப்பதாகவும் நாட்டில் இயற்கையாகக் காணப்படுகின்ற நீர்நிலைகளைச் சரியான முறையில் பயன்படுத்தி வெற்றியடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக, நெற்செய்கைக்குப் பயன்படுத்துகின்ற நீரைத் தேக்கி வைத்து, அதனை நன்னீர் மீன் வளர்ப்புக்குப் பயன்படுத்தும் பொறிமுறையைப் பின்பற்றுவதன் மூலம், பாரிய வெற்றியடைந்து உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், பங்களாதேஷை விட அதிகளவான நன்னீர் நிலைகள் இலங்கையில் காணப்படுகின்ற நிலையில், அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால், குறுகிய காலத்தில் பாரிய மாற்றத்தை அடைய முடியும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், குறித்த கலந்துரையாடலில், நன்னீர் மீன் வளர்ப்பு தொடர்பான அபிவிருத்தித் திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பதற்கான ஏதுநிலைகள் தொடர்பாகவும் குறித்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டதுடன், அது தொடர்பான மேலதிக விளக்கங்கள் மற்றும் பயிற்சிகள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் ஒன்றை முடிந்தளவு விரைவில் ஒழுங்குபடுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
16 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
2 hours ago
4 hours ago