Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 29 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பொருட்களை ஏற்றி வருவதற்கான படகுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று(28) இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான கலந்துரையாடலில் இதை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை நிலவுவதால், அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை முன்னெடுப்பது என்ற தீர்மானம் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு, நான் கூறிவருவது போன்று இந்தியாவிலிருந்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதன் ஊடாக வடக்கு மாகாணம் அதற்கு மேலாக வடமத்திய மாகாணம் நன்மையை பெறும். அது விரைவில் நடைபெறும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து பொருட்களை ஏற்றி வருவது தொடர்பில் அமைச்சரவையில் எவ்விதமான தடையும் இல்லை. கடைசியாக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவை என்று கூறப்பட்டது. அதுவும் பெறப்பட்டுள்ளது.
ஆனால், நாணய மாற்று விடயத்தில் மாத்திரமே சில நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவை நிறைவடைந்ததும் எமது மக்களுக்கு தேவையான பொருட்களை ஏற்றிய படகு இந்தியாவில் இருந்து காங்கேசன்துறையை நோக்கிப் புறப்படும்" என்று தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago