Freelancer / 2023 ஜனவரி 27 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவுக்கு இன்று அரச உத்தியோகத்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றை, பரந்தன் சந்தி பகுதியில் வைத்து தனியார் போக்குவரத்து சங்கத்தினர் இடை மறித்ததால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சேவையாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கான போக்குவரத்துக்களை சீர் செய்யக் கூடிய வகையில் வழமை போன்று யாழ்ப்பாணத்தை சேர்ந்த அரச உத்தியோகத்தர்களை இன்று காலை ஏற்றி வந்த அரச பேருந்தை ஏ-35 வீதியின் பரந்தன் சந்திப்பகுதில் வைத்து தனியார் போக்குவரத்து சங்க நிர்வாகத்தினர் வழி மறித்துள்ளனர்.
இதனால், அமைதியின்மை ஏற்பட்டதுடன் கடமைக்கு சென்ற அரச உத்தியோகத்தர்களும் நீண்ட நேரமாக தடுத்து நிறுத்தப்பட்டனர்
இதையடுத்து, கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், குறித்த பேருந்து சேவை தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் எந்தவித முறைப்பாடுகளும் செய்யப்படாது இவ்வாறு பேருந்துகளை வழி மறைப்பது சட்டத்துக்கு புறம்பானது என்று தெரிவித்து இரண்டு பேரை கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. R



32 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
4 hours ago
5 hours ago