Freelancer / 2024 ஜூன் 28 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - செல்வச்சந்நிதி ஆலய சூழலில் மிக்ஸருக்குள் பொரித்த பல்லி ஒன்று காணப்பட்ட சம்பவத்தில், மிக்ஸரை விற்பனை செய்த நபருக்கு 15,000 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
சந்நிதி ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு , ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அந்நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர், ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது, அதனுள் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது.
அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பல்லியுடன் காணப்பட்ட மிக்ஸரை சான்று பொருளாக பெற்றுக்கொண்ட பொது சுகாதார பரிசோதகர் குறித்த இனிப்பு கடைக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை , மிக்ஸரை விற்பனை செய்த நபரை கடுமையாக எச்சரித்த மன்று அவருக்கு 15,000 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. R
43 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago