Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 செப்டெம்பர் 07 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
இணுவில் காரைக்கால் சிவன் கோவிலை அண்மித்த பகுதிகளில் நாக பாம்புகள் உள்ளிட்ட பாம்புகள், விஷ ஜந்துக்களை கண்ணுற்றால் சமூக பொறுப்புடன் 077-9507269 எனும் அலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு, நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் சி.கௌசல்யா கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், சிலரின் வீடுகள் மற்றும் விவசாய காணிகளுக்குள் வரும் நாக பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களை உயிருடன் பிடித்து வந்து, சிவன் கோவில்களை அண்டிய பகுதிகளில் விட்டு செல்கின்றனர் எனச் சாடினார்.
இந்துக்கள் மத்தியில் நாக வழிபாட்டு முறை உள்ளமையால், நாக பாம்பை அடித்துக் கொல்வதற்கு பலருக்கும் தயக்கம் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், அதனால் அதனை உயிருடன் பிடித்து, வந்து கோவில் சூழலில் விட்டு செல்கின்றனர் எனவும் கூறினார்.
'புராதன ஆலயமான காரைக்கால் சிவன் கோவிலை சுற்றி பல பாம்பு புற்றுகள் உள்ளன. அந்த புற்றுக்களுக்குள் தற்போது நாக பாம்பு உள்ளிட்ட பாம்புகள் குடி கொண்டுள்ளன,
'இந்நிலையில் அவை தற்போது கோவிலை அண்மித்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் விவசாய காணிகளுக்குள்ளும் படையெடுக்கின்றன. அதனால் அப்பகுதி மக்கள் பாம்புகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்' எனவும், அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் நல்லூர் பிரதேச சபையின் கவனத்துக்கு கொண்டு சென்றதை அடுத்து, அவர்கள் மூலம் வனவிலங்கு பாதுகாப்பு துறையின் உதவியை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
'அதன் மூலம், கோவில் சூழலில் நாக பாம்புகள் உள்ளிட்ட பாம்புகள் , விஷ ஜந்துக்களை கண்ணுற்றால் சமூக பொறுப்புடன் 077-9507269 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு அறிவிக்கவும்.
'இதேவேளை, கோவிலை அண்மித்த பகுதிகளில், பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை கொண்டுவந்து உயிருடன் விடுவதை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறேன்' எனவும், அவர் தெரிவித்தார்.
1 hours ago
29 Aug 2025
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
29 Aug 2025
29 Aug 2025
29 Aug 2025