Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
புடையன் பாம்பு கடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், மட்டுவில் வடக்கைச் சேர்ந்த கந்தன் சண்முகம் (வயது 65) என்பவராவர்.
மட்டுவில் பகுதியில் வசித்து வரும் குறித்த நபர், கூலிவேலை செய்து வருபவர். இவர், 26ஆம் திகதியன்று, வளவு ஒன்றைத் துப்புரவு செய்து கொண்டு இருந்துள்ளார். இதன்போது எதிர்பாராத விதமாக காலில் பாம்பு கொத்தியுள்ளது.
பாம்பு கொத்துக்கு இலக்கான குறித்த குடும்பஸ்தர் மயக்கமடைந்துள்ளார் இதையடுத்து, உடனடியாக அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (28) இரவு உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
24 minute ago
2 hours ago
2 hours ago