Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 டிசெம்பர் 02 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
புதிதாக எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொண்டவர்களே, எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதாக முறைப்பாடு செய்துள்ளனர் என, யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில், நேற்றைய தினம் (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில், எரிவாயு அடுப்புகள் வெடித்து சிதறிய சம்பவங்கள், 1ஆம் திகதி புதன்கிழமை வரை, மூன்று பதிவாகியுள்ளன என்றார்.
முதலில், கந்தரோடை அதன் பின்னர், வட்டுக்கோட்டை மற்றும் அராலி பகுதிகளில் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன எனவும், அவர் கூறினார்.
இந்த நிலைமை குறித்து ஆராய்ந்து, கடந்த வார இறுதியில், பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக குறித்த நிலைமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தேன் எனத் தெரிவித்த அவர், அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமைப்பீடம், இந்த விடயங்களை அதாவது, எரிவாயு அடுப்பு வெடித்தல் சம்பவங்களை அவ்வப் பிரதேச பொலிஸ் நிலையங்களின் ஊடாக விசாரணை செய்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளார்கள் எனவும், மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
எனவே, எமது பாவனையாளர் அதிகார சபையினரால், யாழ்ப்பாணம் மாவட்டத்தில், எரிவாயு அடுப்பு வெடித்தல் இடம்பெற்ற பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்கள் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அந்த அறிக்கையின் ஊடாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
'குறிப்பாக, இந்த விடயமானது தேசிய மட்டத்தில் இடம்பெற்றுவரும் ஒரு சம்பவமாகும். எனவே இந்த விடயம் தொடர்பில் பாவனையாளர்கள் எச்சரிக்கையாக இந்த விடயத்தை கையாள வேண்டும். குறிப்பாக புதிதாக எரிவாயு சிலிண்டர்களை பெற்றவர்களிடம் இருந்தே இந்த முறைப்பாடு அதிகம் கிடைக்கப்பெற்றுள்ளது' என்றும், அவர் தெரிவித்தார்.
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago