Princiya Dixci / 2022 செப்டெம்பர் 12 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் பூசணிக்காயை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் 40 கிலோகிராம் பூசணிக்காய் களவாடப்பட்டிருந்தது.
அது தொடர்பில் தோட்டக்காரரால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , வட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள மூளாய் பகுதியில் நபரொருவர் 40 கிலோகிராம் பூசணிக்காயை ஒரு கிலோகிராமுக்கு 70 ரூபாய் வீதம் விற்பனை செய்ததாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பூசணிக்காயை விற்ற நபரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago