எம். றொசாந்த் / 2019 மார்ச் 06 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டுவில் பகுதியில் வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் மூவரை சாவகச்சேரி பொலிஸார் இன்று (06) கைது செய்துள்ளனர்.
மட்டுவில் வின்சன் வீதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று (05) இரவு புகுந்த கும்பல் ஒன்று வீட்டின் கதவை கொத்திச் சேதப்படுத்தி அட்டகாசம் புரிந்துள்ளனர்.
இலக்கத்தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிளில் வந்த 20க்கும் மேற்பட்ட கும்பலே தாக்குதலை மேற்கொண்டுள்ளது. குறித்த கும்பல் வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னர் மட்டுவில் சந்தியில் கூடி நின்று அட்டகாசம் புரிந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரான சமாதான நீதவான் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், ஏனையவர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
10 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago