2025 மே 08, வியாழக்கிழமை

’மருதனார்மடம் கொத்தணி வீரியம் மிக்கது’

Niroshini   / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தற்பொழுது, மருதனார்மடம் சந்தைக் கொத்தணியில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்றானது, மிகவும் வீரியம் கூடியதாக காணப்படுகின்றதென, வடக்கு மாகாணச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமூகப் பொறுப்புடன், வீட்டிலிருந்தே அமைதியாக பண்டிகைகளை கொண்டாடுவோமென்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், பண்டிகைகளுக்காக பொதுமக்கள் பெருமளவில் ஒன்றுகூடும் போது, இந்நோய் தமது பிரதேசத்தில் மேலும் தீவிரமாகப் பரவும் வாய்ப்புள்ளதென்றார்.

எனவே, அனைவரும் இப்பண்டிகைக் காலத்தில், கொரோனா தடுப்பு பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலம்;, உங்களையும் உங்கள் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் அனைவரையும் பாதுகாத்துக்கொள்ள முடியுமெனவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X