Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 செப்டெம்பர் 01 , பி.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
ஊரடங்கு வேளையில், இராணுவம், பொலிஸார் முன்னிலையில் வன்முறைக் கும்பல் ஒன்று ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சம்வம் ஒன்று, மருதனார்மடம் சந்தியில், இன்று (01) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அதனால் அந்தப் பகுதியில் பதற்றநிலை காணப்படுகிறது.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தையடுத்து பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு முன்பாக பழக்கடை நடத்துபவர் மீதே, இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவரது, கழுத்து, காலில் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன என்று, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்ற.
மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பலே, தாக்குதலை நடத்தியுள்ளது.
குறித்த நபர் மீதும் அண்மையில் அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதல் நடத்தியோர் விளக்கமறியலில் உள்ள நிலையில், அதே கும்பலைச் சேர்ந்த ஏனையோரால், இன்று மீண்டும் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
54 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago