Editorial / 2019 மே 15 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவப்பீடச் சிற்றுண்டிச்சாலை நடத்துநர் ஆகியோரை விடுவிக்குமாறு கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழ மாணவர்களால், பல்கலைக்கழக வளாக முன்றலில், இன்று (15) காலை 9 மணிக்கு, கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த மாணவர்கள் உள்ளிட்ட மூவர் தொடர்பான வழக்கு விசாரணை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில், நாளை (16), இடம்பெறவுள்ள நிலையில், சட்டமா அதிபர், குறித்த மூவரின் விடுதலை தொடர்பில், உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டுமென்று, போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள், இதன்போது வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
50 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
50 minute ago
56 minute ago
1 hours ago