Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
S. Shivany / 2020 டிசெம்பர் 13 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினரின் கண்காணிப்பில் உள்ள மூன்று தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களில், 427 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கமைய, கேப்பாபிலவு விமானப்படைத்தள கண்காணிப்பு நிலையத்தில் 222 பேரும், கேப்பாபிலவில் உள்ள 59 ஆவது படைப்பரிவின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் 84 பேரும், புதுக்குடியிருப்பு திம்புலி பகுதியில் அமைந்துள்ள 68 ஆவது படைப்பிரிவின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் 121 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் மற்றும் தெற்கில் படையிரின் நிர்வாக செயற்பாடுகளில் கடமையாற்றியவர்கள் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களுக்கு கட்டம் கட்டமாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
3 hours ago