Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2022 ஜனவரி 20 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு, ஐயன்கன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பலபெருமாள்குளம், புத்துவெட்டுவான் மற்றும் கோட்டைகட்டியகுளம் ஆகிய பிரதேசங்களில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐயன்கன்குளம் பொலிருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்திய சோதனையில், அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிச்சென்ற மற்றும் அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற குற்றத்தின் அடிப்படையில் 6 டிப்பர் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, அதன் சாரதிகளே மேற்படி கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐயன்கன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறித்த பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வந்தனர்.
இந்நிலையிலேயே கடந்த 3 நாள்களில் மேற்படி 6 வாகனங்களும் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
37 minute ago
1 hours ago