Freelancer / 2023 ஏப்ரல் 12 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
ஆவரங்கால் சிவசக்தி திருமண மண்டபத்துக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த HT 5084 இலக்கமுடைய நீல நிற Honda suppercup 90 வகை மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (10) திருமணத்துக்குச் சென்று திரும்பி வந்த பார்த்த போதே குறித்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
முற்பகல் 10.30 தொடக்கம் 12.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்திலேயே திருடப்பட்டுள்ளது. இத்திருட்டு தொடர்பாக மோட்டார் சைக்கிள் உரிமையாளரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிள் தொடர்பான விபரம் அறிந்தவர்கள் உரிமையாளரான சு.பாலசுப்பிரமணியம் 0777655527 என்பவரது இலக்கத்திற்கோ அல்லது அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்க முடியும்.
யாழ் குடாநாட்டில் மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 minute ago
11 minute ago
13 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
11 minute ago
13 minute ago
15 minute ago