Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 24 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு, தேவிபுரத்தில் அண்மையில் மக்கள் குறைகேள் சந்திப்பொன்று நடைபெற்றது. வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனினால் முன்னெடுக்கப்பட்ட இச்சந்திப்பில் கலந்துகொண்ட மக்கள் பல்வேறு குறைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
கடந்த 20ஆம் திகதி, பிற்பகல் 2 மணியளவில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள தேவிபுரம் 'அ' முன்பள்ளி வளாகத்தில் இந்த மக்கள் சந்திப்பை வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் முன்னெடுத்தார்.
தேவிபுரம் கிராம மக்களின் கோரிக்கைக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் தேவிபுரம் 'அ' மற்றும் வள்ளிபுனம் பகுதிகளைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். மாணவர்கள் சிலரும் கலந்து தமக்கான கற்றல் உபகரணங்கள் தொடர்பிலும் தொலைதூரத்திலிருந்து பாடசாலைக்கு நடந்து வருவதிலுள்ள இடர்பாடுகளையும் தெரிவித்தனர்.
இது தவிர வாழ்வாதார உதவிகள் பற்றியும் பலரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
முன்வைக்கப்பட்ட குறைகள் அனைத்தையும் கேட்டுக்கொண்ட ரவிகரன், மாணவர்களின் கற்றல் உபகரணங்கள் மற்றும் மிதிவண்டி தொடர்பிலும் வாழ்வாதார உதவிகள் தொடர்பிலும் சிலருக்கு உடனடியாக உறுதியளித்தார்.
மேலும், அக்கிராமத்தின் வளர்ச்சிப்பணிகளில் தன்னுடைய உதவிகள் தொடர்ந்தும் கிடைக்கும் என வாக்குறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
08 Jul 2025