Editorial / 2019 மே 17 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜித்தா, எம், றொசாந்த்
யாழ்ப்பாணம் - கஸ்தூரியார் வீதியில் இந்தியர்கள் இருவரை, விசேட அதிரடிப் படையினர், இன்றுக் காலை (17) கைதுசெய்துள்ளனர்.
இந்திய தமிழகத்தைச் சேர்ந்த இருவர் சுற்றுலா விசாவில் வருகை தந்து, யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகை கடை ஒன்றில் வேலை செய்யும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், பொலிஸ் மற்றும் இராணுவம் உட்பட விசேட அதிரடிப் படையினர் யாழில் பலத்த பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன், சோதனை நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகின்றார்கள்.
சோதனையின் பிரகாரம், சுற்றுலா விசாவில் வருகை தந்த குறித்த இருவரும், நகை கடையில் வேலை செய்துள்ளனர்.
இதன்போது, பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது, அவ்விருவரும் போதிய ஆவணங்களைச் சமர்ப்பிக்காத நிலையில் கைதுசெய்யப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
7 minute ago
13 minute ago
53 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
53 minute ago
59 minute ago