2025 மே 01, வியாழக்கிழமை

யாழில் இருந்து கொழும்புக்கு கடத்திய 250 கி.கி கஞ்சா மீட்பு

Editorial   / 2022 ஜனவரி 16 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குக் கடத்திய 250 கிலோகிராம் கஞ்சா, நேற்று (15) மாலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா, ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கூலர் ரக வாகனத்தை, ஈரப்பெரியகுளம் சோதனை சாவடியில் வழிமறித்து சோதனை செய்த போதே, அதில் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த வாகனத்தை  முழுமையாக சோதனை செய்த போது பொதி செய்யப்பட்ட நிலையில் 250 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டது.

இதனை உடமையில் வைத்திருந்தமை மற்றும் எடுத்துச் சென்றமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஈரப்பெரியகுளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .