2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 06 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 315 பேருக்கு நேற்றுசனிக்கிழமை  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த,ஒருவருக்கே கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தது.இவர்,பருத்தித்துறை சுகாதார அதிகாரி பிரிவைச் சேர்ந்தவராவார்.

 ஓடக்கரைப் பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பரிசோதனைக்கு உட்பட்டவர்களில் ஏனையவர்களுக்கு தொற்று இல்லையென உறுதிசெய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X