Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 நவம்பர் 11 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், எஸ். நிதர்ஷன்
யாழ். எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம், தனது 79ஆவது வயதில், இன்று (11) அதிகாலை காலமானார்.
அவரின் இறுதி கிரிகைகள், கோப்பாயில் உள்ள அவரது இல்லத்தில், இன்று மதியம் நடைபெறவுள்ளது.
கோப்பாய் தெற்கு மாதா கோவிலடியை சேர்ந்த இராசையா சுந்தரலிங்கம், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமசந்திரனின் தீவிர இரசிகனாவார். அத்துடன் அ.தி.மு.கவின் தீவிர விசுவாசியும் ஆவார். தமிழகம் சென்று எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்தும் உள்ளார்.
எம்.ஜி.ஆர் போன்று கறுத்த கண்ணாடி அணிந்து தோளில் சால்வையுடன் சைக்கிளில் வலம் வரும் இவரை, பலரும் 'யாழ்ப்பாண எம்.ஜி.ஆர்' என அழைத்தனர்.
எம்.ஜி.ஆரின் பிறந்த தினம், நினைவு நாள்களில், தன்னால் முடிந்தளவுக்கு தனது சொந்த நிதியில், வறியவர்களுக்கு உதவிகளை செய்வார்.
அத்துடன், யாழ்ப்பாணம் - கல்வியங்காட்டு சந்தை பகுதியில், எம்.ஜி ஆருக்கு சிலையும் வைத்துள்ளார்.
8 hours ago
30 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
30 Aug 2025