Freelancer / 2023 மார்ச் 12 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 16 இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் - புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த கடற்தொழிலார்கள் இரு படகுகளில் எல்லை தாண்டி, கடற்தொழிலில் ஈடுபட்டு இருந்த வேளை இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைநகர் கடற்பரப்பில் நான்கு கடற்தொழிலாளர்களும், பருத்தித்துறை கடற்பரப்பில் 12 கடற்தொழிலார்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் படகுகளும் கைப்பற்றப்பட்டன
கைது செய்யப்பட்டவர்கள் மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக நடவடிக்கைக்காக நீரியல் வளத்துறை திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
காரைநகர் கடற்பரப்பில் கைதான நால்வரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் , பருத்தித்துறை கடற்பரப்பில் கைதான 12 பேரையும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. R
9 hours ago
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
06 Mar 2026