Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஒக்டோபர் 31 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையிலான ரயில் சேவை, புதன்கிழமை (03) மாலை ஆரம்பமாக உள்ளதாக, யாழ்ப்பாண ரயில் நிலையத்தின் பிரதான ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.
இதற்கமைய, புதன்கிழமை (03) மாலை 5.30 மணிக்கு, கொழும்பு - கல்கிசையில் இருந்து புறப்படும் ரயில் யாழ். - காங்கேசன்துறையை வந்தடைந்து, மறுநாள் வியாழக்கிழமை (04) காலை 5.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு, கொழும்புக்கு பயணிக்கவுள்ளது எனவும், அவர் கூறினார்.
'எனினும், இன்று வரை முற்பதிவு தொடர்பான எந்தவித தகவல்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனவே, புதன்கிழமை ஆரம்பமாகும் ரயில் சேவையானது, வழமைபோல் இடம்பெறவுள்ளது.
யாழில் இருந்து கொழும்புக்கு ஒரு சேவையும் கொழும்பில் இருந்து யாழுக்கு ஒரு சேவையுமாக சாதாரண பரயில் சேவை மாத்திரமே முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளது' என, அவர் மேலும் தெரிவித்தார்.
42 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
55 minute ago
2 hours ago