Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2021 ஒக்டோபர் 06 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ். நகரப் பகுதியில், நேற்று வரையான 24 மணிநேரத்தில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.
அச்சுவேலியில் 12.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், பருத்தித்துறையில் 5.4 மில்லிமீற்றர், நயினாதீவில் 4.1 மில்லிமீற்றர், யாழ்ப்பாணத்தில் 62.3 மில்லிமீற்றர், யாழ்ப்பாண நகர் பகுதியில் 79 மில்லிமீற்றர், நெடுந்தீவில் 2.2 மில்லிமீற்றர், சாவகச்சேரியில் 10.8 மில்லிமீற்றர், தெல்லிப்பளையில் 15.5 மில்லிமீற்றர், அம்பனில் 15.5 மில்லிமீற்றர், திருநெல்வேலியில் 41.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
தற்போதுள்ள மழையுடன் கூடிய காலநிலையானது எதிர்வரும் சில நாள்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
05 May 2025