Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய, இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கொவிட் 19 தடுப்பூசி ஏற்றல் தேசிய செயற்றிட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், நாளை (11) முதல் 15ஆம் திகதி வரை தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் நெறிப்படுத்தலில், நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால், இந்தச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தினமும் முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 1 வரை, பல்கலைக்கழக சுகநல நிலையத்தில் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.
எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் பதிவு செய்யப்பட்ட மாணவர்களும், பணிபுரிவோரும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்றும், தடுப்பூசி ஏற்ற வரும் போது தேசிய அடையாள அட்டை, பல்கலைக்கழக அடையாள அட்டை ஆகியவற்றைக் கொண்டு வருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
05 May 2025