Editorial / 2020 மார்ச் 13 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
வடக்கு மாகாணத்தில், உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை எனவும் மக்கள், வீணான குழப்பங்கள் கொள்ளத் தேவையில்லை எனவும், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னாயத்த நடவடிக்கைகளையிட்டு, வடக்கு மாகாணத்தின் பல மாவட்டங்களிலும், உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது என்ற வதந்தியால், அச்சத்தில் மக்கள் மேற்குறித்த பொருள்களைக் கொள்வனவு செய்வதில் சிரமங்களுடன் முண்டியடிப்பதாகவும், ஆளுநருடைய கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுவரையிலும் இவற்றுக்கான எந்தவிதத் தட்டுப்பாடும் வடமாகாணத்தில் இல்லை என்பதைத் தெரிவிப்பதோடு, மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவசியம் ஏற்படின், கொழும்பிலிருந்து விரைவாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026