Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூன் 22 , மு.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வெறுமனே உரிமை பிரச்சனையோ, அரசியல் பிரச்சனையோ அல்ல எங்களது பிரச்சனைகள்,
இந்த சமூகத்திலே புரையோடிப்போயிருக்கின்ற பல்வேறு உளநல பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய தேவையும் அவசரமும் காணப்படுகின்றது என்று வடமாகாண ஆளுனர் பி. எஸ். எம்.
சாள்ஸ், புதன்கிழமை (21) தெரிவித்தார்.
வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவிலே பிரதம விருந்தினராக
கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கில் சுமார் 194 பாடசாலைகள் மூடப்பட்டள்ளதாக தெரியவருகின்றது. மூடப்பட்ட
பாடசாலைகளுக்கான காரணத்தினை ஆராய்ந்தபோது வடக்கில் சுமார் 194 பாடசாலைகள்
மாணவர்கள் இல்லாமையினால் மூடப்பட்டிருக்கிறது.
இதற்கான காரணமாக கிராமப்புறங்களில் இருந்து நகரங்களை நோக்கி மாணவர்கள் நகரத்
தொடங்கியிருக்கின்றமையும், பிறப்பு வீதம் குறைந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.
இதே காரணத்தை கிழக்கிலே மட்டக்களப்பில் 07 வருடங்கள் அரச அதிபராக கடைமையாற்றும்
போதும் கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளை மூடிக்கொண்டிருந்தோம்.
மேலும் இதற்கும் காரணமாக பிரதேச செயலாளர்களாகல் பிறப்பு வீதம் குறைவடைந்து
வருகின்றமை மற்றும் 01ஆம் வகுப்பிலே மாணவர்களை அனுமதிப்பதில் சில பாடசாலைகளில்
பூச்சிய மட்டத்தில் காணப்படுவதாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது.
எனவே இந்த விடயங்கள் புலம்பெயர்ந்த சமூகத்தினாலும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற
சமூகத்தினாலும் கணக்கில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் என நான் கருதுகின்றேன்.
நாங்கள் வாழவைக்க வேண்டும் என எண்ணுகின்ற எங்களது சமூகம், நாங்கள் வளமாக இருக்க
வேண்டும் என நினைக்கின்ற மக்கள், இந்த பிரதேசம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது
என்பதை உணர்வீர்கள் என நான் நினைக்கிறேன். சில புள்ளிவிபரங்கள் இச்சமூகத்திலே சில
விடயங்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கின்றன.
குறிப்பாக விவாகரத்து அதிகரித்து காணப்படுதல், குழந்தை பேறு குறைவடைந்துள்ளமை, வயது
சென்ற திருமணங்கள் அதிகரித்து காணப்படுதல் மற்றும் குடிபோதை, போதைவஸ்து, தற்கொலை
போன்ற பல்வேறு சமூக பிரச்சனைகள் இருக்கின்றன.
எனவே இவற்றை எல்லாம் கடந்து இச் சமூகம் வாழ வேண்டும் என்றால் இந்த சமூகத்துக்கு
புலம்பெயர்ந்த சமூகம் ஆற்ற வேண்டிய பணி நிறைய இருக்கின்றது ” என்றார். R
5 minute ago
7 minute ago
21 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
7 minute ago
21 minute ago
33 minute ago