2025 மே 02, வெள்ளிக்கிழமை

வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Niroshini   / 2021 டிசெம்பர் 12 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். தில்லைநாதன் 

வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில், கைதடியில் உள்ள வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில்,  நாளை மறுதினம் (14) நடைபெறவுள்ளது.

 மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் காலதாமதம் அடையும் நிலைமையில், இந்த ஏற்பாட்டை ஆளுநர் மேற்கொண்டுள்ளார்.

இந்தக் கூட்டத்துக்கு, வடக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள்,  நிர்வாக அதிகாரிகள் எனப் பலரும் அழைக்கப்பட்டுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

மேற்படி கூட்டம் கடந்த 10ஆம் திகதி இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில், பாராளுமன்றத்தில், வரவு - செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு காரணமாக பிற்போடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X