Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜூன் 18 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். நிதர்ஷன்
நாளுக்குநாள் அதிகரித்துச் செல்லும் வடமாகாணக் கல்வியமைச்சின் செயற்பாடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து, நீதியான விசாரணை நடத்தப்படவேண்டும் என, இலங்கை ஆசிரிய சங்க்தினால், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம், கடிதம் மூலமும் மின்னஞ்சல் மூலமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஆளுநர், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட நிகழ்வொன்றில், கடந்தகாலக் கல்வி தொடர்பான செயற்பாடுகளில், வடமாகாண சபையின் முன்னாள் அரசியல்வாதிகளைத் தொடர்புபடுத்தியிருந்ததை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன என்றும் இந்நிலையில், கல்வி அமைச்சின் முறைகேடுகள் மற்றும் பாரபட்சங்களிலிருந்து, வடமாகாணக் கல்வியை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும், அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
பக்கச்சார்பற்ற விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படும் பட்சத்தில், இலங்கை ஆசிரியர் சங்கம், சகல ஆதாரங்களுடனும் சாட்சியாளர்களுடனும் சாட்சியங்களை வழங்கத் தயாராக உள்ளதாகவும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
8 hours ago